பாகிஸ்தான் மீதான தாக்குதல்; ஆபரேஷன் சிந்தூர் ; இந்தியா பெயரிட காரணம் என்ன?
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) புதன்கிழமை (07) ஒன்பது தளங்களைத் தாக்கி இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்தபோது, அந்தத் திட்டத்திற்கு – ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது.
சிந்தூர் அல்லது குங்குமம் என்பது திருமணமான இந்துப் பெண்களின் அடையாளமாகும். ஏப்ரல் 22 அன்று பஹல்காம் படுகொலையில் புதிதாகத் திருமணமானவர்கள் உட்பட ஆண்கள் தங்கள் மதத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
அதோடு போர் வீரர்களால் ஒரு சிந்தூர் திலகமும் பெருமையுடன் அணியப்படுகிறது.
எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்த முதல் அறிவிப்பில், இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரை காட்சிப்படுத்த ஒரு படத்தைப் பயன்படுத்தியது.
மேலும் ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் கணவன்களை இழந்த பெண்களை மனதில் கொண்டு, பதிலடி கொடுக்கும் இராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று குறியீட்டுப் பெயரை வைத்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.