Operation Sindoor; இந்தியாவுக்கு பதிலடி கொடுக்காமல் விடப்போவதில்லை
பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துள்ளதாகவும் பாக். பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
31 பேர் பலி 57 பேர் காயம்
பாகிஸ்தான் மீது இந்தியா நேற்றிரவு வான்வழித் தாக்குதலை நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் தமது எல்லைப் பகுதியில் நடத்திய குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டதாக, இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.