சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகள் ; சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை

Law and Society Trust Sri Lanka Sri Lankan Peoples Social Media
By Vironika May 19, 2025 07:27 AM GMT
Report

நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கவலை வௌியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதி அமைப்புக்கும் தீங்கு விளைவிக்கும் சில கருத்துகள் மற்றும் பதிவுகளை சில சமூக ஊடக தளங்களில் பொதுமக்கள் பதிவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகள் ; சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை | Online Posts Lawyers Association Issues Repor

நீதித்துறையின் சுயாதீனம்

நீதி நிர்வாகத்தில் நீதித்துறை அதிகாரிகள் வகிக்கும் முக்கிய பங்கையும், நீதித்துறையின் கடமைகள், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிசெய்தல் மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு, நீதித்துறை நடத்தையை மறுபரிசீலனை செய்வதற்காக சட்டம் தெளிவான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது.

சில நபர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் நீதித்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும், எந்த உண்மைத்தன்மையும் அடிப்படை ஆதாரங்களும் இன்றி சில விடயங்களை தெரிவித்துள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

19 வயது இளைஞனை பலியெடுத்த துப்பாக்கிச் சூடு ; சிக்கிய விமானப்படை சிப்பாய்

19 வயது இளைஞனை பலியெடுத்த துப்பாக்கிச் சூடு ; சிக்கிய விமானப்படை சிப்பாய்

இது தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் மற்றும் உட்பட்ட விடயங்களைப் பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் நீதித்துறை அமைப்புக்கும் செயல்முறைக்கும் நெறிமுறையற்றவை என்றும், இதனூடாக நீதிமன்ற நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சூழல் உருவாகும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு அறிக்கைகள் அல்லது கருத்துகளை வெளியிடும்போது, ​​விசாரணை செயன்முறைக்கு பாதகமான அல்லது தேவையற்ற பொது அழுத்தத்திற்கு வழிவகுக்கும் வகையிலான எந்தவொரு நடத்தையிலிருந்தும் பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

காருக்குள் சிக்கி உயிரிழந்த நான்கு சிறுவர்கள்; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்

காருக்குள் சிக்கி உயிரிழந்த நான்கு சிறுவர்கள்; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்

நீதித்துறை அதிகாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் சட்டங்களால் அனுமதிக்கப்படும் போது தவிர, பொது குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்கமாகவோ அல்லது வேறு விதமாகவோ பதிலளிக்க முடியாது.

எனவே, மேற்கூறியவற்றைக் கருத்திற்கொண்டு, நீதித்துறை அதிகாரிகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது பொறுப்பான கலந்துரையாடல், உரிய செயல்முறைக்கு மரியாதை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதி செய்வது அவசியம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; கணவன் கைது

நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; கணவன் கைது

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US