இலங்கையை உலுக்கிய சம்பவம்; சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!
தெல்தெனிய பெண் கொலை சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்! கண்டி தெல்தெனியவில் அண்மையில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல நிதி மோசடி வழக்குகளிலும் தேடப்பட்டு வருபவர் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026.06.17 அன்று தெல்தெனிய வைத்தியசாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், 33 வயதுடைய வெலிகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட, மரணமடைந்தவரின் காதலனாக அடையாளம் காணப்பட்ட நபர், 2026.06.24 அன்று அதிகாலை யாழ்ப்பாணம் பகுதியில் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை
கைது செய்யப்பட்டபோது, அவரது சட்டப்பூர்வ மனைவி எனக் கருதப்படும் 35 வயதுடைய பெண்ணும் அவருடன் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான பெண் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் கண்டி – பல்லேகலே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். விசாரணையில் வெளிப்பட்ட தகவல்கள் சந்தேகநபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பல முந்தைய மோசடி சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
- திருமணம் செய்வதாக கூறி ரூ. 11,873,000/- மோசடி செய்தல் மற்றும் காரை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் தொடர்பான வழக்கு – கம்பஹா நீதவான் நீதிமன்றம்
- திருமணம் செய்வதாக கூறி ரூ. 1,721,000/- மோசடி – கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் (எண் 05)
- திருமணம் செய்வதாக கூறி ரூ. 1,376,000/- மோசடி – கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் (எண் 05)
- வெளிநாட்டில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்வதாக கூறி ரூ. 2,200,000/- மோசடி – திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம்
- குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் கொழும்பு புதுக்கடை, ஹொரண, கடுவெல ஆகிய நீதிமன்றங்களில் 04 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ. 4,200,000/- மோசடி – கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம்
சந்தேகநபர் மற்றும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.