புதைந்து போன கடைத்தொகுதியல் ஒருவர் பலி
கண்டி - பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக கொழும்பு செல்லும் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மண்மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது அருகில் இருந்த 4 கடைகள் மண்மேட்டின் கீழ் புதைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீட்பு நடவடிக்கை
குறித்த இடத்திற்கு அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன நபரை கண்டுபிடிக்க மின்சார சபை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய, இன்று அதிகாலை காணாமல் போனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் இந்த மண் மேடு சரிந்ததால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.