வடக்கில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பம்!
முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கான உரிமைக்கான யுத்தத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் எதிர்வரும் (27.11.2023) ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் (27.11) மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் வழமையாக கடைப்பிடிக்கப்படும்.
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.
அந்தவகையில் (21.11.2023) ஆம் திகதி முதல் எதிர்வரும் (27.11.2023) ஆம் திகதி வரை மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்படுவது வழமையாகும் .
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்றையதினம் (21.11.2023) உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.