புத்தளத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
புத்தளம் ஆனமடுவ, சியம்பலாகஸ்வெவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 65 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் இன்று (02) காலை 6.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து தனது சகோதரனின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த காலங்களில் இந்த பகுதியில் யானைகளின் தாக்குதலால் பலர் இறந்துள்ளதாக சியம்பலாகஸ்வெவ மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த காட்டு யானைகள், சியம்பலாகஸ்வெவ அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருவதாகவும், இரவும் பகலும் இங்கு சுற்றித் திரியும் சுமார் 20 யானைகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், ஆனமடுவ பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.