கட்டுதுப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு ; ஒருவர் கைது
அனுராதபுரம் திரப்பனை பகுதியில் உள்ள பயிர்ச்செய்கை நிலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கட்டுதுப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கட்டுப்பாக்கியை பொருத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
திரப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உட்டிமடுவ பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்து திரப்பனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 54 வயதுடைய உட்டிமடுவ பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்... வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ; பூரிப்பில் செய்த செயல்
கட்டுதுப்பாக்கியை பொருத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபரால் மிருகங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.