கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இரு தரப்பினருக்குடையில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளானவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தலங்கம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பத்தரமுல்லை மற்றும் தலவத்துகொட பகுதிகளை சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேக நபர்களிடமிருந்து ஒரு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.