உந்துருளி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு
புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கைவேலி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றுக்குள் வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுனர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் என காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.