உலகின் மிக உயரமான சிவன் கோவில்; எங்குள்ளது தெரியுமா?
ஆலயங்கள் தான் ஒரு கிராமத்தின் அடையாளமாக ஆதிகாலம் முதல் இருந்து வருகின்றது. உலகில் அதிகம் இந்து ஆலயங்கள் அமைத்துள்ள நாடாக, இந்தியா உள்ளது.
இங்குள்ள ஆலயங்கள் பல மன்னராட்டிகால மிகப் பழமை வாய்ந்த ஆலயங்கள் ஆகும். அந்தவகையில் உலகின் மிக உயரமான சிவன் கோவில் இந்தியா உத்தரகாண்ட் துங்கநாத்தில் தான் அமைந்துள்ளதாம்.
உத்தரகாண்ட் துங்கநாத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிவன் கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது.
பாண்டவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமான்
பாரத போரில் கௌரவர்களை வதம் செய்த தோஷத்திற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டி வந்த பாண்டவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமான் காளை வடிவில் உருமாறியதாக கூறப்படுகிறது.
சிவன் உடலின் ஒவ்வொரு பகுதியுடன் தொடர்புடைய இடங்களே பஞ்ச கேதார் தலங்கள். துங்கநாத்தில் சிவனின் கைகள் காணப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
ஒப்பீட்டளவில் இந்த கோயில் சிறிய அளவில் இருந்தாலும், இது அற்புதமான மற்றும் வியக்கத்தக்க வகையிலான கல் சிற்பங்கள் மற்றும் தனித்துவமான இமயமலை பாணியுடன் கூடிய நேர்த்தியான கட்டிடக்கலையை கொண்டுள்ளது.
பனி மூடிய சிகரங்கள், அல்பைன் புல்வெளிகள்
பனி மூடிய சிகரங்கள், அல்பைன் புல்வெளிகள் மற்றும் ரோடோடென்ட்ரான் உள்ளிட்டவை துங்கநாத் கோயிலைச் சுற்றியுள்ள Garhwal Himalayas-ன் வசீகரமான அழகை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
நகர்ப்புற வாழ்க்கையின் பரபரப்பு மற்றும் சலசலப்புகளிலிருந்து விடுபட்டு நல்ல அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த கோயில் மனதிற்கு நிம்மதி மற்றும் அமைதியை வழங்குகிறது.
இந்த கோயில் மற்றும் இதனை சுற்றியுள்ள அற்புதமான இயற்கை காட்சிகள் மற்றும் பல்வேறு சீசன்களில் இமயமலையின் அழகிய அழகைப் படம்பிடிக்க கிடைக்கும் சிறந்த வாய்ப்புகளால் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் என பலரும் இவ்விடத்திற்கு அதிகம் வருகிறார்கள்.
சிறந்த யாத்திரை ஸ்தலம்
ஆன்மீக முக்கியத்துவம் தவி துங்கநாத் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் மலையேற்றம், முகாம் மற்றும் பறவைகளைப் பார்ப்பது, சாகசக்காரர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் பல்வேறு சாகச நடவடிக்கைகள் என பலவற்றை கொண்டுள்ளது.
துங்கநாத்தை அடைய ஒரு சிறிய மலையேற்றம் செய்ய வேண்டியிருந்தாலும், இந்த பயணம் பெரும்பாலான வயதானவர்கள் கூட அணுகக்கூடியது என்பதால் இது ஒரு சிறந்த யாத்திரை ஸ்தலமாக திகழ்கிறது.