செப்டெம்பரில் நாட்டுக்கு வந்த ஒரு லட்சம் பேர்!
இலங்கைக்கு செப்டெம்பரில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை 111,938 சுறு்றுலா பயணிகள் வருகையோடு செப்டெம்பர் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 93 சதவீதத்தை மட்டுமே அடைந்துள்ளது.
10 இலட்சம் சுற்றுலா பயணிகளின் வருகை
நாட்டிற்கு செப்டெம்பர் மாதத்தில் குறைந்தது 120,201 சர்வதேச சுற்றுலா பயணிகளை வரவழைப்பதை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) இலக்காக கொண்டிருந்தது.
இந்நிலையில், செப்டெம்பர் மாத்தத்தில் முக்கிய குறிப்பிடத்தக்க மைல்கல்லான 10 இலட்சம் சுற்றுலா பயணிகளின் வருகையை கடந்தது.
ஜனவரி மாதம் 01 முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1,016,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு கொவிட் தொற்று மற்றும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுடன் போராட வேண்டிருந்ததன் காரணமாக பிற நாடுகள் இலங்கைக்கு பயண தடைகளை விதித்திருந்தன.
செப்டெம்பர் மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை முதல் மூன்று வாரங்களில் சராசரியாக 26,135 ஆகவும், நான்காவது வாரத்தில் 33,531 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.