பாலர் பாடசாலை ஆசிரியைக்கு ஒமிக்ரோன்!
மினுவாங்கொட – நில்பனாகொடி பகுதியில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து தற்போது குறித்த பாலர் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு கல்வி கற்ற 20 மாணவர்கள், ஆசிரியை உள்ளிட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஆசிரியைக்கு, சில தினங்களுக்கு முன்னர் கொரோனா நோய் அறிகுறிகள் இருந்தமையினால் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாரிடமிருந்து இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது இதுவரையில் உறுதியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை மாணவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை என்றும் அவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.