நடு வீதியில் கசிந்த எண்ணெய் ; அடுத்தடுத்து நடந்த விபத்துக்களால் பலர் படுகாயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் புதன்கிழமை (20) காலை 7.30 - 8.30மணிக் கிடையில் 4 விபத்துக்கள் சம்பவித்தன.
ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த 4 மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகின.
லொறி சாரதியின் அலட்சியப் போக்கு
குறித்த வீதியின் தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மோட்டார் வாகன பழுது பார்க்கும் நிலையத்தின் முன்பாகவே இந்த விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
குறித்த நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து எண்ணெய் கசிந்து பிரதான வீதியில் சென்று கொண்டிருந்ததை தொடர்ந்து வீதி ஊடாக அச்சந்தரப்பத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் வீதியில் வழுக்கி விழுந்து விபத்துக்கள் சம்பத்துள்ளது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் விடுதிரும்பியுள்ளனர்.
இவ்விபத்து நிகழ்ந்து சில நிமிடங்களில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் வீதியூடான போக்குவரத்தை பாதுகாப்பாக முன்னெடுத்ததோடு சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் வாகன பொழுது பார்க்கும் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் லொறி சாரதியின் அலட்சியப் போக்கினாலேயே இந்த விபத்துக்கள் சம்பவித்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர்.