தமிழர் பகுதியை உறைய வைத்த சம்பவம் ; உறவை முறிக்க நினைத்த காதலிக்கு காதலனின் குடும்பம் கொடுத்த ஷாக்
மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்கு முன்னால் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
சினிமா பாணியில் கடத்தல்
27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு அவரவர் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சில காலங்களுக்கு பின்னர் இந்த பதிவு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பெற்றோருக்கு தெரிய வந்துள்ள நிலையில் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளதுடன், பல தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த பெண் விவாகரத்து கோரி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரியார் நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து காதலன் திரும்ப நாட்டுக்கு வந்து வழக்கிற்கு நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணையில் பங்கெடுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினமானத்தன்று குறித்த வழக்கு விசாரணைக்கு காதலி அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். காதலன் அவரது சகோதரி மற்றும் ஒரு குழுவினருடன் சென்று நீதிமன்றுக்கு சென்றுள்ளார்.
வழக்கு விசாரணையின் பின்னர் வெளியே வந்த காதலியை காதலனின் குழுவினர் முச்சக்கர வண்டியில் கடத்த முற்பட்டுள்ளனர். காப்பாற்ற முற்பட்ட காதலியின் உறவினர் ஒருவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று தள்ளி விட்டு சினிமா பாணியில் குறித்த பெண்ணை காதலன் அவரது சகோதரியும் கடத்தி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.