வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறு; யாழ் குப்பிள்ளான் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள்
2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் அனைத்துப்பாடங்களிலும் அதிதிறமை சித்திகளை (9A) பெற்று தாம் கற்ற பாடசாலைக்கும் தமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் வேம்படி வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை மாணவிகளும் , யாழ்- குப்பிளான் கிராமத்தை சேர்ந்த மாணவிகளுமான கயூரா - வரதராஜன், கிருஸ்ணகுமார் - சங்காரிணி, ஸ்ரீமான்- கஜந்தினி ஆகிய மூவரும் அனைத்துப்பாடங்களிலும் 9 A சித்திபெற்று பாடசாலைக்கும் தனது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் .
இந்நிலையில் சாதாரண தர பரீட்சையில் 9 A பெற்று சித்தியடைந்து கிராமத்திற்கு பெருமை சேர்ந்த மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
அதேவேளை வெளியான கா.பொ.த சாதரண தர பரீட்சையில், அகில இலங்கை ரீதியில் கண்டியை சேர்ந்த மாணவி முதலாவது இடத்தையும், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர் இரண்டாம் இடத்தினையும், கொழும்பு மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது