நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பயணிப்போர் அவதானம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று (03) அதிகாலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகிறது.
எனினும் தற்போது வாகனங்கள் தங்குதடையின்றி பயனிக்க கூடிய நிலை காணப்பட்டாலும், காலை மற்றும் மாலை நேரத்தில் இப்பகுதியில் அதிக பனிமூட்டம் நிறைந்த வானிலை காணப்படுவதினால் நுவரெலியா, தலவாக்கலை, ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமவுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் மண்சரி ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என நானுஓயா பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.