பிரித்தானியாவில் பணமோசடி: குற்றத்தை ஒப்புக்கொண்ட நட்வெஸ்ட் வங்கி!
பிரித்தானியாவில் உள்ள நட்வெஸ்ட் வங்கி பணமோசடியில் ஈடுபட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 400 மில்லியன் பவுண்டுகளை நட்வெஸ்ட் வங்கி ஒரு வாடிக்கையாளரிடமிருந்து சட்டத்துக்கு புறம்பாக தமது வங்கியில் வைப்பு செய்துள்ளது.
பிரித்தானியாவின் அரசாங்கத்தின் ஆதரவுடன் வங்கி முன்னர் றோயல் பேங்க் ஒப் ஸ்காட்லாந்து என்ற பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இவ்வாறு தனது பணமோசடி குற்றச்சாட்டை ஒத்துக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
நட்வெஸ்ட் வங்கி பெரும் தொகையான அபராதத்தை எதிர்கொண்டு உள்ளதாக நீதிமன்றத்துக்கு இது தொடர்பாக வழக்கறிஞனர்கள் தெரிவித்தனர்.
பிரித்தானியாவின் நிதி நடத்தை ஆணையம் (Financial Conduct Authority) நீதிமன்றத்துக்கு நட்வெஸ்ட் வங்கி இந்த வழக்கை கொண்டு வந்து இருந்தது.
ஃபோலர் ஓல்ட்ஃபீல்ட் லிமிடெட் ( Fowler Oldfield Ltd) என்ற நிறுவனம் 5 வருட காலப்பகுதியில் 365 மில்லியன் பவுண்டுகளை தமது வங்கியில் வைப்பு செய்ய அனுமதி செய்து இருந்தது. இவற்றில் 264 மில்லியன் பவுண்டுகள் பணமாக செலுத்தப்பட்டுள்ளது.
2016 பொலிஸாரின் திடீர்சோதனையை தொடர்ந்து ப்ராட்போர்ட என்ற நகரில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வந்த Fowler Oldfield என்ற நிறுவனம் மூடப்பட்டது. அந்த நிறுவனத்திடம் (Fowler Oldfield)இருந்து வங்கி கணக்கு ஆரம்பிக்கும் பொழுது பணமும் கையாளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த நிறுவனம் ஒரு வருடத்தில் 15 மில்லியன் பவுண்டுகள் வரை வியாபாரம் மூலம் பெறப்படும் என்று தெரிவித்திருந்தது , அனால் ஐந்து வருடத்தில் 365 மில்லியன் பவுண்டுகளை வங்கியில் செலுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.