காலி முகத்திடலில் காவல் தெய்வங்களான கன்னியாஸ்திரிகள்!
நேற்றையதினம் காலிமுகத்திடலில் மத ரீதியாக மோதல் நடக்க கூடாது என்பதற்காக கிறிஸ்துவ பெண் கன்னியாஸ்திரிகள் கூடி அரணாக நின்று போராட்ட மக்களை காத்த சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது.
இரவு முழுக்க தூங்காமல் அவர்கள் கோட்ட கோ கம பகுதியிலேயே தங்கி மக்களை காத்தனர். நேற்று முந்தினம் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது மகிந்த குண்டர்கள் தாக்குதலை மேற்கொண்டதுடன், அவர்கள்து கூடாரங்களையும் சேதப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து ஆத்திரம் கொண்ட மக்கள் அரசியல் வாதிகளின் வீடுகளுக்கு தீமூட்டி சேதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இலங்கை கலவர பூமியானது. இந்த நிலையில் இரவில் போராட்டம் நடக்கும் இடத்தில் கலவரக்காரர்கள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Saints.
— Roel Raymond (@roelraymond) May 11, 2022
Nuns and priests reportedly stayed up through the night last night in order to protect #GotaGoGama from violence from any outside element seeking to destabilize peaceful protests #SriLanka #lka pic.twitter.com/BmhkdLsJMh
மதம் இன மொழு கடந்து கன்னியாஸ்திரிகளின் இந்த செயல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்க தூங்குங்க.நாங்க பார்த்துக்குறோம் என்று கூறி அவர்கள் அங்கேயே இரவு முழுக்க தங்கி இருந்தனர்.
போராட்டகாரர்கள் மீது அரசு இரவில் துப்பாக்கி சூடு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் கன்னியாஸ்திரிகள் தங்களை சுட்டாலும் பரவாயில்லை என தைரியமாக மக்களுக்காக அரணாக நின்றனர்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் குறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ள நிலையில் கன்னியாஸ்திரிகளின் செயலானது பல்லரையும் நெகிழவைத்துள்ளது.