அமெரிக்காவில் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்காவில் கல்வி கற்கு இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச கல்வி பரிவர்த்தனை திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையின்படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கல்வித் தொடர்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கல்வித் தொடர்புகளை இந்த எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
EducationUSA போன்ற நிகழ்ச்சிகளின் மூலம், இந்த கலாச்சார பரிமாற்றத்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்க தாங்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் படிப்பதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளைக் கருத்தில் கொள்ள இலங்கை மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.