காலி பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களால் தொல்லை
காலி நகரம் மற்றும் காலி கோட்டை பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதியில் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாய் கடிக்கு அடிக்கடி ஆளாவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக, உள்ளூர் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
அதேசமயம் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, கருத்தடை செய்யும் நிறுவனங்களை காலி பகுதியில் செயற்படுத்த சில குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன