மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி
நுகேகொடை - பாகொட வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹான பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
9 பேர் கைது
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் இரண்டு ஆண்களும் மசாஜ் நிலைய உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்னேவ, அநுராதபுரம், பாதுக்கை, ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 40 வயதுக்குட்பட்ட பெண்களும் 35 மற்றும் 50 வயதுக்குட்பட்ட ஆண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.