கொழும்பிலுள்ள பிரிட்டன் விசா அலுவலகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
கொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகம், வாரத்தில் மூன்று நாட்கள் திறக்கப்பட்டிருக்கும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, நேற்று முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய விசா விண்ணப்ப மையம் அறிவித்துள்ளது.
அதன்படி , வாரநாட்களில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறித்த அலுவலகம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அலுவலகத்திற்கு வருகைதரும் வாடிக்கையாளர்கள், உள்ளுர் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைப் பேணவும், உடல் வெப்பநிலைமையை பரிசோதிக்கவும் கோரப்படுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள், அலுவலகத்திற்கு வருவதற்கான முன்னனுமதியைப் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் , வாடிக்கையாளர் தெரிவு செய்த நிலையம், முன் அனுமதி பெறப்பட்ட தினத்தில் திறந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகம் அறிவித்துள்ளது.