பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய வெளியான தகவல்
சீரற்ற வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தில் சேதமடைந்த பகுதிகளில் துப்புரவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறமாட்டாது என பல்கலைக்கழக நிர்வாகம் இன்று (5) அறிவித்துள்ளது.
சமீபத்தில் நாட்டில் நிலவிவந்த பலத்த மழை, வெள்ளம், மண்சரிவு, புயல் காற்று போன்ற பேரிடர்களால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பெருமளவு பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன், பல கட்டடங்கள், தளபாடங்கள் சேதமாகியிருந்தன.

கல்விச் செயற்பாடுகள்
இதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் அன்றாட கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் சேதமடைந்த பகுதிகளில் தற்போது துப்புரவு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒரு வார காலத்துக்கு, டிசம்பர் 15ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
பல்கலைக்கழகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் திகதியை மாணவர்களுக்கு அந்தந்த பீடங்கள் அறிவிக்கும் என்றும் மீள ஆரம்பமாகும் திகதி பற்றிய அறிவிப்பு குறித்து தெரிந்துகொள்ள மாணவர்கள், பேராதனை பல்கலைக்கழகத்தினதும் பீடங்களினதும் உத்தியோகபூர்வ வலைத்தளங்களுக்குள் பிரவேசித்து தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.