தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் பகுதி, அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த வெளியேறும் பகுதி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மிரிகம நுழைவுப் பகுதி மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் பகுதி ஆகிய இடங்களில் வாகன நெரிசல் பதிவாகியுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும், போக்குவரத்து நெரிசலை கருத்திற்கொண்டு பயண நேரத்தை திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்கள் மற்றும் நிலைமை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.