தமிழர் பகுதியில் உழவு இயந்திரம் மோதி 7 வயது சிறுமி பரிதாப பலி
மன்னார் விடத்தல்தீவு பகுதியில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த 7 வயது சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்து நேற்று (25) மாலை, அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவில் அமைந்துள்ள கிளை வீதி ஒன்றில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை செலுத்திய 32 வயதுடைய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.