இந்த காலத்திலும் இப்படியா! கணவருக்காக கோவில் கட்டிய பெண்
இந்தியாவில் விபத்தில் உயிரிழந்த கணவரின் நினைவாக கோவில் கட்டி அவருக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தி வரும் மனைவியின் செயல் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அங்கிரெட்டி பத்மாவதி தம்பதி வசித்து வந்தனர். விவசாயம் செய்து வரும் இந்த தம்பதிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் அங்கிரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவருக்கு பின் விவசாயபணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்த நிலையில் மறைந்த கணவனின் நினைவாகவே இருந்த பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர் கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து தனது கணவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகனிடம் பத்மாவதி கூறியுள்ளார் . தாயின் விருப்பப்படியே தங்கள் விவசாய நிலத்தருகே தந்தையின் சிலையை பொருத்தி கோவிலை அவரது மகன் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து சம்பிரதாயத்துக்காக கோவிலை கட்டி பூட்டிபோட்டு வைத்திருக்காமல் தினமும் கோவிலில் உள்ள தனது கணவரின் சிலைக்கு பூஜைகள் செய்து பத்மாவதி வழிபட்டு வருகிறார்.
