இடம்பெற வாய்ப்பில்லை வாய்ப்பில்லை; முந்தியடித்து இராஜினாமா செய்த இந்திய வம்சாவளிப்பெண்!
பிரித்தானிய பிரதமராக லிஸ் ட்ரஸ் (Liz Truss) தெரிவான நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெற விருப்பமில்லை எனக் கூறி, இந்திய வம்சாவளி அமைச்சரான பிரிதி பட்டேல் (Priti Patel) ராஜினாமா செய்துள்ளார் .
பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் ட்ரஸ் (Liz Truss) தெரிவாகியுள்ளார்.
இந்த நிலையில், லிஸ் ட்ரஸ் (Liz Truss) அமைச்சரவையில் இடம்பெற விருப்பமில்லை என தெரிவித்து உள்விவகார அமைச்சரான பிரிதி பட்டேல் (Priti Patel), முதல் ஆளாக தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .
மேலும், நாட்டுக்காக தமது பொது சேவையை தொடர வேண்டும் என்பது தமது விருப்பம் எனவும், அதை எந்த பதவியும் இல்லாமல் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை , லிஸ் (Liz Truss) அமைச்சரவையில் பிரிதி பட்டேல் (Priti Patel) இடம்பெற வாய்ப்பில்லை என்ற தகவல் கசிந்த நிலையிலே, அவர் முந்திக்கொண்டு அமைச்சர் பதவியை துறந்ததாகவும் கூறப்படுகிறது.
லிஸ் ட்ரஸ் (Liz Truss) தமது புதிய அமைச்சரவையை அறிவிக்கும் போது அதில் பிரிதி பட்டேல் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் கண்டிப்பாக இடம்பெறப் போவதில்லை என்றே நம்பப்படுகிறது.
இந்த நிலையில், புதிய பிரதமரால் பதவியை பறிக்கும் முன்னர் தாமாகவே ராஜினாமா செய்வது முறை என்பதால், பிரிதி பட்டேல் (Priti Patel) முந்திக்கொண்டதாக கூறப்படுகின்றது.
போரிஸ் ஜோன்சனுக்கு கடிதம்
மேலும், பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அவர் (Priti Patel) எழுதியுள்ள கடிதத்தில், நமது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸை (Liz Truss) நான் வாழ்த்துகிறேன், மேலும் நமது புதிய பிரதமராக அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019ல் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னர், அவரது அமைச்சரவையில் உள்விவகார அமைச்சராக பிரிதி பட்டேல் (Priti Patel) பொறுப்பேற்றார் .
மேலும், புலம்பெயர்வோர் தொடர்பில் பல விவாதத்துக்குரிய முடிவுகளை முன்னெடுத்தவர் பிரிதி பட்டேல்(Priti Patel) என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.