சுமந்திரனின் சிபாரிசில் வடக்கின் புதிய ஆளுநர் அரசால் அதிரடி நியமனம்?
வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா ஆளுநருக்கான பதவியை எதிர்வரும் புதன் கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது.
இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளார்.
அதனால் தற்போது வகிக்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் புதிய ஆளுனராக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள ஒருவராக ஜீவன் தியாகராஜா மாறியுள்ளர் இவரை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை, மிசனெரிகளால் தேர்வு செய்யப்பட்டு சுமந்திரனால் சிபாரிசு செய்யப்பட்டவர் என மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா தனது முகநுால் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
01.வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்!
02.ஆளுநர் செயலகத்திலிருந்து வெளியேறினார் பி.எம்.சாள்ஸ்