அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநரின் செயலாளர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை!
யாழ்.தென்மராட்சி பகுதியிலுள்ள வயல் நிலங்களில் தேங்கும் வெள்ள நீர் தொடர்பில் ஒரு வார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் செயலாளர் வாகீசன் பணிப்புரை விடுத்துள்ளார்.
தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் (09-11-2022) செவ்வாய்க்கிழமை ஆளுநரின் செயலாளருக்கும் தென்மராட்சி விவசாயிகளுக்கும் இடையிலான சந்திப்பு வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் தென்மராட்சி பிரதேசத்தில் வெள்ள நீர் தேங்குவது இயற்கையான தரை தோற்றம் காரணமாகவா அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைகள் காரணமா ஆளுநரின் செயலாளர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான நிலையில் குறித்த வெள்ள நீர் தொடர்பில் ஒரு வார காலத்துக்குள் ஆளுநர் செயலகத்திற்கு அனுப்புமாறு நீர்பாசனத் திணைகளம் மற்றும் கமநல சேவைத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.