வடக்கில் பதிவானது இவ்வருடத்தின் முதல் கொரோனா மரணம்
மன்னார் மாவட்டத்தில், இவ்வருடத்தின் முதலாவது கொரோனா மரணம் நேற்றையதினம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அத்துடன் , மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 35 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் கூறினார்.
அந்த வகையில் நேற்றையதினம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரே, கடந்த 30ஆம் திகதி , மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.