ஈரானுக்கு ஆதரவாக வடகொரிய ஏவுகணைகளும் தயார்நிலையில் ; களத்தில் மகளுடன் வடகொரிய அதிபர்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்கள் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடி நடவடிக்கையாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், வடகொரிய, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதல்கள் பிராந்திய அமைதிக்கு கேடு விளைவிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அந்த அறிவிப்பு வெளியான சில நேரங்களிலேயே வடகொரியா சக்திவாய்ந்த ஏவுகணை சோதனையொன்றை மேற்கொண்டது.
இந்த ஏவுகணை சோதனையை வடகொரிய தலைவர் Kim Jong Un தனது மகளுடன் சேர்ந்து நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Sohae Satellite Launching Station அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து இந்த நவீன ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்குள் வடகொரியா மேற்கொண்ட இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.
இந்த நடவடிக்கை, பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.