ஒரே மணித்தியாலத்தில் ஈரானை இருட்டில் மூழ்கடிப்போம் ; ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் ஜனாதிபதி மூன்று நிபந்தனைகளை விடுத்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் ஒரு மணித்தியாலத்தில் இருட்டில் மூழ்கடிக்கப்போவதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈரானின் வான் பரப்பு முழுவதும் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், மத்திய கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த Strait of Hormuz நீரிணையில் இருந்த ஈரானிய கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நிலைமை குறித்து உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.
இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் உலக பொருளாதாரத்திற்கும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துக்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாடுகள் இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.