கஞ்சாவுடன் சிக்கிய கல்விசாரா ஊழியர் ; பொலிஸார் தீவிர விசாரணை
புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தல விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இன்று (05) குறித்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.

கஞ்சா தொகை
கைது செய்யப்பட்டவர் வெல்லவாய, மஹா ஆரகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விசாரா பணியாளராக கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கஞ்சா தொகையுடன் பயணித்துக்கொண்டிருந்த போதே அதிரடிப்படையினரிடம் சிக்கியுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகவும் புத்தல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.