தலைவலியைத் தீர்க்கும் நொச்சி இலை தலையணை
இந்த நவீன காலகட்டத்தில் வயது வரம்பு இன்றி அனைவருக்கும் சைனஸ் பிரச்சனை இருந்து வருகின்றது.
மேலும், நீண்ட நாட்களாக எதற்கு என்றே தெரியாமல் அடிக்கடி வரும் தலைவலி,தலையில் நீர் கோர்த்து தலை பாரமாக இருப்பதற்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் இன்றி இந்த நொச்சி தலையணையை பயன்படுத்தினால் மட்டுமே இவை அனைத்தும் சரியாகிவிடும்
எத்தனையோ ஆண்டுகளாக இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தி வந்த மூலிகை தான் இந்த நொச்சி இலை. தரிசு நிலங்களில் தானாக வளரக்கூடிய இந்த நொச்சி இலை பல்வேறு விதமான மருத்துவ குணங்களைக் கொண்டது.
இந்த நொச்சி இலை மூலிகையை ஒவ்வொரு விதமாக பயன்படுத்துவதன் மூலமாக நம்முடைய பிரச்சனைகளும் குணமாகி விடுகின்றது.
அதில் ஒன்று தான் தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய நொச்சி இலை மூலிகையின் மூலமாக செய்யப்படும் தலையணை.
முதலில் நொச்சி இலையை தலையணை செய்வதற்கு தேவையான அளவிற்கு பறித்து தனித்தனி இலையாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெறும் தலையணை உரையை எடுத்து அதில் பறித்து வைத்த நொச்சி இலையை போட வேண்டும்.
பின்னர் அதன் மீது சிறிதளவு பச்சரிசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது நொச்சி இலை ஒரு முறை, பச்சரிசி ஒரு முறை என மாறி மாறி போட வேண்டும்.
இலையுடன் சேர்ந்து பச்சரிசியை போடும் பொழுது இலையில் உள்ள ஈரத்தன்மையை பச்சரிசி உறிஞ்சி வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் . பின்பு ஊசி நூலை கொண்டு உரையின் முகப்பைத் தைத்து ஒரு தலையணை போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இந்த தலையணையை இரவில் தூங்கும் பொழுது தினமும் பயன்படுத்தி வந்தால் நீண்ட நாள் தலைவலி, சைனஸ் பிரச்சனை, பின்பகுதியில் ஏற்படும் கழுத்து வலி, தலைபாரம் என அனைத்தும் சரியாகிவிடும்.
இப்படி இந்த தலையணையை ஒருமுறை செய்து வைத்துக் கொண்டால் மாதம் ஒருமுறை மட்டும் இலையை எடுத்துவிட்டு மீண்டும் புதிய இலையைப் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒரு மாதம் வரைக்கும் இந்த நொச்சி இலை மூலிகை தலையணை பயன்படுத்திக் கொள்ளலாம்.