தேர்தலை நடத்த நிதி இல்லை என்றால் இராஜாங்க அமைச்சர்களை நீக்குங்கள்! (Video)
தேர்தலை நடத்த நிதி இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரை நீக்கவேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று அரசாங்கம் போலியான பிரசாரங்களை செய்து வருகிறது. உண்மையில் நிதி இல்லை என்றால் நாட்டிலுள்ள 39 இராஜாங்க அமைச்சர்களை நீக்க வேண்டும். அத்துடன் 39 இராஜாங்க அமைச்சர்களுக்காக 340 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு பாரியளவில் நிதி செலவிடப்படுகிறது. மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர்கள் எவருமில்லாது நாட்டை ஒரு வருடம் ஆட்சி செய்தார்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்....