ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை; ராணுவம் மறுப்பு
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட காரர்கள் மீது, தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என ராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இத் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ராணுவம் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்ட காரர்கள் கடந்த சனிக்கிழமை உள் நுழைய முற்பட்ட போது ராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற் கொண்டுள்ள காணொளிகள் பரவி வருகின்றன.
ராணுவத்தினர் இதனை ஆர்ப்பாட்ட காரர்கள் உள் நுழையும் போது அதனை தடுக்கும் விதமாக மாளிகையின் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் வான் நோக்கியும் துப்பாக்கி சூட்டை பிரயோகித்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் "இத் துப்பாக்கி சூட்டை பிரயோகிப்பதனால் ஆர்ப்பாட்ட காரர்கள் மீது துப்பாக்கி சூட்டை வேண்டும் என்றே பிரயோகித்தனர் என்று அர்த்தப்பட மாட்டாது" என இராணுவத்தினர் கூறியுள்ளனர்.