ஜனாதிபதி அனுரவின் செலவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதா?
2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி அனுரகுமாரவின் செலவினம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொருளாதார பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த நிராகரித்துள்ளார்.
அவை தவறாக வழிநடத்தும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தவறானவை என்றும் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த கூறினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கூறுகையில்,
2.9 பில்லியன் ரூபாயில் தொடங்கிய 2025 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டடூலத்தில், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முழு செலவும் சேர்க்கப்படவில்லை என்று விபரித்தார்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ரூ. 5.05 பில்லியன் தனித்தனியாகவும், புதுமை மற்றும் வணிகமயமாக்கல் தொடர்பான ஆராய்ச்சிக்கு கூடுதலாக ரூ. 1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவினத்திற்கான துல்லியமான ஒதுக்கீடு ரூ. 9 பில்லியனாக இருக்கும். ஊடக அறிக்கைகள் 2026 ஒதுக்கீட்டு மசோதா செலவினத்தை ரூ. 11.6 பில்லியனாக ஒப்பிடுகின்றன, இதில் ஏற்கனவே கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகளும் அடங்கும்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை செப்டம்பர் 26 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்த ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவின் சார்பாக 2026 நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.