பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
அரசாங்கம் அண்மையில் பெட்ரோல் விலையை குறைத்திருந்த போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் பிரதம செயலாளர் லலித் ரோஹன பெரேரா தெரிவிக்கையில், தற்போது ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 16 ரூபாய் நட்டத்துடனேயே முச்சக்கரவண்டி சேவையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை குறைப்பு மட்டுமே கட்டணக் குறைப்புக்கு போதுமான காரணமாக அமையாது என்றும், உதிரிப்பாகங்கள், பராமரிப்பு செலவுகள் மற்றும் ஏனைய செயற்பாட்டு செலவுகள் தொடர்ந்து அதிகமாகவே காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் முச்சக்கரவண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது