Zoom இல் ஆஜர்படுத்தப்பட்ட ரணில்; நீதிமன்றில் குவிந்த அரசியல்வாதிகள்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணில் பல அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றுக்கு வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன்னர் வந்துள்ளார்.
பதற்றமடையும் நீதிமன்ற வளாகம்
எதிர்க்கட்சித் தலைவருடன், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரிக்கப்படும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வருகை வந்துள்ளார்.
இதே வேளை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஏராளமானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.