மீண்டும் மிரட்டும் ‘நிபா’ வைரஸ்; 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவின் – கேரளா மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இதனையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில், நேற்று மீண்டும் மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் இரண்டு பேருக்கு குறித்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
. ‘நிபா’ வைரஸ் தொடர்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை கேரளாவில் கடந்த வருடம் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் ‘நிபா வைரஸ்’ தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.