இரவுநேர களியாட்ட விடுதி சுற்றவளைப்பு ; 13 பேர் கைது !
கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு வந்த இரவு நேர களியாட்ட விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 12 வெளிநாட்டவர்கள் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த களியாட்ட விடுதிக்குள் காணப்பட்ட அனுமதிப்பத்திரம் அற்ற 483 பியர் போத்தல்கள், 6 வைன் போத்தல்கள், உள்நாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 100 சிகரெட்டுக்கள் என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த களிநாட்ட விடுதியை வெளிநாட்டு பெண்ணொருவரே நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தவறை ஏற்றுக் கொண்டதன் பின்னர் , 90 000 அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்தமையை களியாட்ட விடுதியின் முகாமையாளர் ஏற்றுக் கொண்டமையால் அவருக்கு 60,000 அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் பொது பொலிஸ் ஊடகப் பிரிவு ஏனைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.