விருந்தினர்களின் இரவு; 94 பேர் சிக்கினர்!
“விருந்தினர்களின் இரவு” என பெயரிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட குறித்த விசேட சோதைனை நடவடிக்கை 94 பேர் கைது செய்யப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (31) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 94 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்செயல்கள்
இந்த கைது நடவடிக்கையானது, அதிகாலை 3 மணிதொடக்கம் 5 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 10 பேர் சந்தேகத்தின் பேரிலும் நீதிமன்ற பிடிவிறாந்து விதிக்கப்பட்ட 32 பேரும் போதைப் பொருள்களுடன் மூவரும் சட்டவிரோத மதுபாவனை தொடர்பில் 11 பேரும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி ஒருவரும் வேறு போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் 37 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதுளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவின் ஆலோசனைக்கமைய ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் வழிநடத்தலில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.