அடுத்த ஜனாதிபதி இவர்தான்; அடித்துக்கூறும் மஹிந்தவின் ஆஸ்தான ஜோதிடர்!
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் ஜோதிடரும் முன்னாள் அரச ஜோதிடருமான சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் இடம்பெற்றிருந்தால் சஜித் வென்றிருப்பார்
சஜித் பிரேமதாச நிச்சயம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார். கஜகேசரி எனும் சக்தி வாய்ந்த ராஜயோகம் அவரது ஜாதகத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த முறை தேர்தல் ஒன்று வைத்திருந்தால் 8 வது ஜனாதிபதியும் சஜித் பிரேமதாஸவே செயற்பட்டிருப்பார் என்றும், எனினும் தேர்தல் வைக்காமல் இருந்தமையினால் சஜித்தினால் ஜனாதிபதியாக முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
எனினும் நாட்டின் 9 வது ஜனாதிபதி சஜித் பதிவி ஏற்பதற்கு அனைத்து பலன்களும் சஜித் பிரேமதாசவுக்கு உள்ளதாக தெரிவித்த ஜோதிடர், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சஜித் நியமிக்கப்படுவார் என்றார்.
மேலும் தந்தை ரணசிங்க பிரேமதாஸவை போன்று சஜித் நாட்டை ஆழ்வார் எனவும் ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.