யாழ் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்கு புதிய இணையத்தள சேவை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்கு புதிய இணையத்தள சேவையொன்று இன்று(07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த இணையத்தளம் இன்று(7) காலை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலயம் தொடர்பான தகவல்கள்
இந்த இணையத்தள சேவையின் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் பக்தர்கள் ஆலயத்தில் இடம்பெறும் பூசைகள், நிகழ்வுகள் மற்றும் சமூக நலத் திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
அத்துடன் சமூக நலத் திட்டங்கள் தேவைப்படுவோருக்கு உரிய முறையில் திட்டங்கள் சென்றடையவும் இவ் இணையதளம் வழிவகுக்கும்.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.