லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளராக மொட்டுக் கட்சி உறுப்பினர் நியமனம்
பதுளை மாவட்டம் - லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சார்ந்த ஒருவரும் போட்டியிட்டனர்.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த எல்பி என் யு ஏ அனுரவிக்கமதுங்க மூன்று வாக்குகளால் லுணுகலை பிரதேச சபையில் புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை சார்ந்த மூன்று உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவர் மலையக மக்கள் முன்னணியின் ஒருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது லுணுகலை பிரதேச சபை இரண்டு தடவைகள் தோல்வியடைந்த நிலையிலேயே புதிய தவிசாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.