இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் புதிய தூதுவர் கூறியது
நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக விளங்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி சங் (Julie Chung) கூறியுள்ளார்.
அதோடு இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் எனவும் ஜூலி சங் (Julie Chung) கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழுவின்முன் கருத்துவெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்துசமுத்திரத்தின் இதயத்தில் மூலோபாய ரீதியில்முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது உலகளாவிய கடற்பாதைகள் மற்றும் வர்த்தக வழித்தடங்களிற்கான வழிகளை கொண்டுள்ள இலங்கையின் முக்கிய துறைமுகங்கள் சுதந்திரமான வெளி;ப்படையான இந்தோ பசுபிக்கிற்கு மிகவும் முக்கியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது அமெரிக்கா சிவில் சமூகம் தனியார் துறையினர் பொதுமக்கள் உட்பட இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவினை ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத் திநிற்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தனது நியமனம் உறுதி செய்யப்பட்டால் பேண்தகு சூழல் மற்றும் தொழிலாளர் தாரதங்களை கருத்தில்கொள்ளும்,வெளிப்படைத்தன்மை, சர்வதேச சட்டத்திற்கான மதிப்பு நல்லாட்சி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்ட உட்கட்டமைப்பு முதலீடு ஆகியவற்றிற்காக அயராது பாடுபடுவேன் எனவும் ஜூலி சங் (Julie Chung) இதன்போது தெரிவித்துள்ளார்.