பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையே புதிய ரயில் சேவை
பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையே புதிய தினசரி ரயில் சேவையொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மலையக ரயில் பாதையில், ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையிலான ரயில் சேவை கடந்த 2ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமைபோல் இயங்கி வருவதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பொல்கஹவெல - பேராதனை இடையே ரயில் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் நலன் கருதி, எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் புதிய தினசரி ரயில் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த ரயில் சேவைக்கான நேர அட்டவணையை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.