உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார் ஜோர்தானுக்கான புதிய இலங்கைத் தூதுவர்
ஜோர்தானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீ.எம்.வி. விஷ்வநாத் அபொன்சு, அந்நாட்டின் அம்மான் நகரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜோர்தானைச் சென்றடைந்த அவருக்கு, ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அம்மானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், நாடு, இருதரப்பு உறவுகள் மற்றும் தூதரகப் பணியாளர்களின் நலனுக்காக ஆசீர்வாதம் வேண்டி பாரம்பரிய சமய வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிகழ்வின் பின்னர் தூதரகப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய புதிய தூதுவர், தனது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய செயற்றிட்டங்கள் மற்றும் அவற்றுக்கான முன்னுரிமைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.