இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் அமுலுக்கு வரும் புதிய விதிமுறைகள்!
இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை அறிமுகப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய தினம் (30-01-2024) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வர்த்தமானி வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.